இந்தியா வந்துள்ள வியட்நாம் அதிபருடன் சோனியா காந்தி சந்திப்பு

Header Banner

இந்தியா வந்துள்ள வியட்நாம் அதிபருடன் சோனியா காந்தி சந்திப்பு

  Sat Mar 03, 2018 22:32        India, Tamil

 

மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ள வியட்நாம் அதிபரை சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்தனர். #SoniaGandhi #ManmohanSingh

புதுடெல்லி, 

 

வியட்நாம் அதிபர் டாய் குயாங் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பின் பேரில் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி ஹியான் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளும் இந்தியா வந்தனர். இன்று காலை ராஷ்டிரபதி பவன் வந்த அதிபர் டாய் குயாங்கிற்கு மரபுகள் படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்தார்.

 

இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சி மன்ற குழு தலைவர் சோனியா காந்தியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் வியட்நாம் அதிபரை சந்தித்து பேசினர்.ஏறக்குறைய ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் ஷர்மாவும் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தார். இந்த சந்திப்பின் போது, இந்தியா- வியட்நாம் ஆகிய நாடுகளின் இரு தரப்பு  நலன்கள் மற்றும் பொருளாதார நிலமைகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளார். 

 


   இந்தியா வந்துள்ள வியட்நாம் அதிபருடன் சோனியா காந்தி சந்திப்பு