வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளையடிப்பு கோடிக்கணக்கிலான தங்கம் மற்றும் பணம் பறிபோனது

Header Banner

வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளையடிப்பு கோடிக்கணக்கிலான தங்கம் மற்றும் பணம் பறிபோனது

  Mon Feb 19, 2018 22:32        Tamil

 கான்பூர் மாவட்டத்தில் பசுபதி நகர் யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளையில் கொள்ளையர்கள் கொள்ளையடித்து உள்ளனர். வங்கியின் கிளையை ஒட்டிய வீடு காலியாக இருந்து உள்ளது. அங்கிருந்து கொள்ளையர்கள் டிரில்லர் உதவியுடன் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முகமுடி அணிந்து சென்ற கொள்ளையர்கள் சிசிடிவி கேமராக்களை முதலில் செயல் இழக்க செய்து உள்ளனர். பின்னர் அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.

 

 32 லாக்கர்களில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

வங்கியில் இருந்த 220 லாக்கர்களில் 32 லாக்கர்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. வங்கியில் பணம் இருக்கும் அறையின் கதவையையும் உடைக்க முயற்சி செய்து உள்ளனர், ஆனால் முடியவில்லை. இதனால் பணம் தப்பியது. கொள்ளையர்கள் அவர்களுடைய திட்டத்தை முன்னெடுக்க அதிகமான கால நேரம் எடுத்து உள்ளனர். வங்கிக்குள் கொள்ளையர்கள் நுழைந்த போது சிசிடிவி கேமரா பதிவில் சிக்கிஉள்ளனர். அதனைக்கொண்டு விசாரித்து வருகிறோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

வங்கிக்கு இன்று காலை பணியாளர்கள் வந்தபோது லாக்கர்கள் உடைக்கப்பட்டு கிடந்து உள்ளது. இதனையடுத்து போலீசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

வங்கியில் கொள்ளையடிக்கப்பட பணம் மற்றும் நகைகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுவருகிறது, மதிப்பு விபரம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சிறப்பு படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

 


   வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளையடிப்பு கோடிக்கணக்கிலான தங்கம் மற்றும் பணம் பறிபோனது