ஜெய்ஷா ஊழல் தொடர்பாக பிரதமர் மோடி பேச வேண்டும் ராகுல் காந்தி வலியுறுத்தல்

Header Banner

ஜெய்ஷா ஊழல் தொடர்பாக பிரதமர் மோடி பேச வேண்டும் ராகுல் காந்தி வலியுறுத்தல்

  Mon Feb 12, 2018 21:28        Tamil

பிரதமர் மோடியின் மீதான தாக்குதலை தொடர்ந்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேச வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி உள்ள ராகுல் காந்தி, “நீங்கள் (பிரதமர் மோடி) ஊழல் பற்றி பேசவிரும்பினால் அமித் ஷாவின் மகன் குறித்து சிறிது பேசுங்கள். ஜெய்ஷா தன்னுடைய நிறுவனத்தின் வருவாயை மூன்று மாதத்தில் 50,000 ரூபாயில் இருந்து ரூ. 80 கோடியாக்கினார்.

 

 இதனை நீங்கள் இந்த தேச மக்களிடம் தெரிவிக்க வேண்டும்,” என வலியுறுத்தி உள்ளார்.  

 

மோடிஜி நீங்கள் ஊழல் தொடர்பாக பேசுகிறீர்கள். இதனைதான் முன்னரும் பேசினீர்கள். இப்போது உங்களுக்கு இடது மற்றும் வலது புறத்தில் உள்ளவர்கள் யார் என்று பாருங்கள். ஒருபுறம் சிறையில் சிறைக்கு போன எடியூரப்பா. மறுபுறம் சிறைக்கு சென்ற முன்னாள் 4 மந்திரிகள். உங்களுக்கு பின்னால் நிற்கும் 11 தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் ராஜினாமா செய்தவர்கள் என விளாசினார் ராகுல் காந்தி.

 

பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷாவின் டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த 2013-14-ம் நிதி ஆண்டை காட்டிலும், 2015-16-ம் நிதி ஆண்டில் 80 கோடி அளவுக்கு நிகர லாபம் அடைந்துள்ளது என்று ’தி வயர்’ The Wire செய்தி வெளியிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஜெய் அமித் ஷா, தனது தந்தை அமித்ஷாவின் அரசியல் செல்வாக்கை பாதிக்கும் வகையிலும், தங்கள் வியாபாரத்தை நசுக்கும் வகையிலும் ‘தி வயர்’ செய்தி வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். ஜெய் அமித் ஷா தரப்பில் செய்தி நிறுவனம் மீது ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அமித் ஷா குற்றச்சாட்டை நிராகரித்துவிட்டார். 

 


   ஜெய்ஷா ஊழல் தொடர்பாக பிரதமர் மோடி பேச வேண்டும் ராகுல் காந்தி வலியுறுத்தல்