கைது செய்யப்பட்ட கதிராமங்கலம் கிராம மக்களை விடுவிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்

Header Banner

கைது செய்யப்பட்ட கதிராமங்கலம் கிராம மக்களை விடுவிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்

  Sun Jul 02, 2017 20:01        Tamil

சென்னை,

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் விளை நிலங்களுக்கு இடையே அமைக்கப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

அவர்களை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை பலன் தரவில்லை.  இந்நிலையில், போலீசாருடன் பொதுமக்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கதிராமங்கலத்தில் பொதுமக்கள் கற்களை வீசியதில் காவலர் காயம் அடைந்து உள்ளார்.  இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.  அதன்பின் ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட கதிராமங்கலம் கிராம மக்களை விடுவிக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.  அவர் தொடர்ந்து, மக்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பது மனித உரிமையை மீறும் செயல்

இந்த தாக்குதல் ஜனநாயக உணர்வுகளை நசுக்கும் முயற்சியாக உள்ளது.  பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்

கதிராமங்கலத்தில் இருந்து போலீசார் வெளியேறுவதற்கு முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.   கைது செய்யப்பட்ட கதிராமங்கலம் கிராம மக்களை விடுவிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்