ரம்ஜான் பண்டிகையையொட்டி அனந்த்நாக் பகுதியில் ராணுவம் மக்களுக்கு இனிப்பு வழங்கியது

Header Banner

ரம்ஜான் பண்டிகையையொட்டி அனந்த்நாக் பகுதியில் ராணுவம் மக்களுக்கு இனிப்பு வழங்கியது

  Mon Jun 26, 2017 21:06        Tamil

மும்பை,
 
 
இஸ்லாமிய மக்கள் தங்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்தனர். மாதம் முழுவதும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. ரம்ஜான் மாத இறுதி வாரத்தில் பெண்கள் தங்களுக்கான ஆயத்த ஆடைகள், நகைகள், குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் பேன்சி பொருட்கள் ஆகியவற்றை கடைகளில் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். 
 
இன்று ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மசூதிகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை செய்தனர். புத்தாடை அணிந்தும், உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ரம்ஜான் பெருநாளில் மகிழ்ந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை உற்சாகத்துடன் பரிமாறி கொண்டனர். 
 
பாகிஸ்தான் உதவி பெரும் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் தூண்டுதல் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டு உள்ள காஷ்மீரிலும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. மத்திய பாதுகாப்பு படைகள் மற்றும் காஷ்மீர் போலீசார் தொடர்ந்து இலக்காக்கப்பட்டு வருகின்றனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ராணுவ வீரர்கள் மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர். பொதுமக்களிடம் பேசிய ராணுவ வீரர்கள் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 


   ரம்ஜான் பண்டிகையையொட்டி அனந்த்நாக் பகுதியில் ராணுவம் மக்களுக்கு இனிப்பு வழங்கியது