உத்தரபிரதேசத்தில் ஆற்றுக்குள் பஸ் விழுந்து விபத்து 8 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்

Header Banner

உத்தரபிரதேசத்தில் ஆற்றுக்குள் பஸ் விழுந்து விபத்து 8 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்

  Wed Jun 14, 2017 23:01        India, Tamil

லக்னோ,
 
உத்தரபிரதேச மாநிலத்தில் ஜான்பூர் - அலகாபாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அம்மாநில அரசு பேருந்து பர்காதூர் கிராமத்தில் பாலம் ஒன்றில் இருந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியது. இதில் 8 பேர் பலியாகினர். 30 பேர் காயம் அடைந்து உள்ளனர் என போலீஸ் தெரிவித்து உள்ளது. அலகாபாத் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்து உள்ளது என போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. பாலத்தில் சென்ற பேருந்து தடுப்பு சுவரின் மீது மோதி ஆற்றுக்குள் விழுந்து உள்ளது.
 
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது.

   உத்தரபிரதேசத்தில் ஆற்றுக்குள் பஸ் விழுந்து விபத்து 8 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்