விர்ஜினியா துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த எம்.பி. ஸ்டீவ் உயிரிழப்பு - டொனால்டு டிரம்ப்

Header Banner

விர்ஜினியா துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த எம்.பி. ஸ்டீவ் உயிரிழப்பு - டொனால்டு டிரம்ப்

  Wed Jun 14, 2017 22:52        India, Tamil

வாஷிங்டன்,
 
 
அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருவது அமெரிக்கா வாழ் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று விர்ஜினியா மாகாணத்தில் எம்.பி. ஸ்டீவ் ஸ்கேலீஸ் விளையாட்டு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாகிச்சூடு நடத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் எம்.பி.யுடன் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது. படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எம்.பி. ஸ்டீவ் இடுப்பு பகுதியில் துப்பாக்கி குண்டு துளைத்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விர்ஜினியா போலீசார் துப்பாகிச்சூடு நடத்தியவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இச்சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். எம்.பி. அந்நாட்டு பாராளுமன்றத்தில் உயர் பொறுப்பில் இருந்து உள்ளார். 
 
அமெரிக்காவின் விர்ஜினியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த எம்.பி. ஸ்டீவ் உயிரிழந்தார் என டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். 


   விர்ஜினியா துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த எம்.பி. ஸ்டீவ் உயிரிழப்பு - டொனால்டு டிரம்ப்