பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு வாழ்வாதாரம் அளிக்கிறது ஐ.நா.வில் இந்தியா கடும் தாக்கு

Header Banner

பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு வாழ்வாதாரம் அளிக்கிறது ஐ.நா.வில் இந்தியா கடும் தாக்கு

  Wed Jun 14, 2017 22:47        India, Tamil

புதுடெல்லி,
 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 35வது அமர்வில் பாகிஸ்தானின் அறிக்கைக்கு பதிலளித்து உள்ள இந்தியா, பாகிஸ்தான் காஷ்மீரில் ஸ்திரமின்மையை ஏற்படுத்த பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது என்றது.
 
பாகிஸ்தான் தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை மீண்டும் ஒருமுறை பயன்படுத்த முயற்சி செய்து உள்ளது எனவும் இந்தியா சாடிஉள்ளது.
 
“இந்தியாவின் மாநிலமான ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் வேண்டப்படாத மற்றும் தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்து உள்ளது. பாகிஸ்தானின் பேச்சு உண்மையற்றது. காஷ்மீர் குறித்து பேச பாகிஸ்தானுக்கு எந்தஒரு தொடர்பும் கிடையாது,” என இந்தியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
காஷ்மீரில் ஸ்திரத்திற்கு சவாலாக இருப்பது பயங்கரவாதம் மட்டும்தான். அங்கு பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் வாழ்வாதாரம் அளிக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1267-ன் படி பயங்கரவாத இயக்கங்கள் என அறிவிக்கப்பட்ட இயக்கங்கள் பாகிஸ்தானில் இன்றளவும் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன என இந்தியா குற்றம் சாட்டிஉள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஊடுவ செய்து காஷ்மீரில் அமைதியின்மையை ஏற்படுத்தி ஐ.நா.வில் புகார் தெரிவிப்பதும், இந்தியாவிடம் பதிலடி வாங்கி செல்வதும் வழக்கமான ஒன்றுதான்


   பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு வாழ்வாதாரம் அளிக்கிறது ஐ.நா.வில் இந்தியா கடும் தாக்கு