நாட்டின் விவசாய வளர்ச்சி, தனி நபர் வருமானம் அதிகரிப்பு

Header Banner

நாட்டின் விவசாய வளர்ச்சி, தனி நபர் வருமானம் அதிகரிப்பு

  Wed May 31, 2017 22:32        India, Malayalam

புதுடெல்லி
 
கடந்த ஆண்டு (2016-17) அரிசி உற்பத்தி 109.15 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. கோதுமை உற்பத்தி 97.44 மில்லியன் டன்களாகவும், பருப்பு வகைகள் இதுவரை இல்லாத அளவில் 22.40 மில்லியன் டன்களாகவும் இருந்துள்ளது. தானியங்களின் உற்பத்தி 44.39 மில்லியன் டன்களாக இருந்தது. முந்தைய 2015-16 ஆம் ஆண்டில் உற்பத்தி 38.52 மில்லியன் டன்களாக இருந்தது. 
 
நல்ல மழையளவும், அரசின் கொள்கைகளும் சாதனையளவான விவசாய உற்பத்திக்கு காரணமாக இருந்தது என்கின்றனர் அதிகாரிகள். நடப்பு ஆண்டிலும் வழக்கமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதால் மீண்டும் உணவு உற்பத்தியில் சாதனை படைக்கும் வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த ஆண்டின் தென்மேற்கு பருவ மழை நேற்று கேரளாவில் துவங்கியது. இது வறட்சி பாதித்த தமிழ் நாடு, கேரளா மற்றும் கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நாட்டில் 50 விழுக்காட்டு விவசாயிகள் மழையை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர்.
 
தனி நபர் வருமானம் அதிகரிப்பு
 
நாட்டின் தனி நபர் வருமானம் 9.7 விழுக்காடு அதிகரித்து முன்பிருந்த ரூ. 94,130 எனும் அளவில் இருந்து ரூ. 1,03,219 ஆக உயர்ந்துள்ளது. நிலைத்த விலைவாசியின் அடிப்படையில் தனிநபர் வருமானம் ரூ. 82, 269 ஆக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ. 77, 803 ஆக இருந்தது.
 
தனிநபர் வருமானம் நாட்டின் வளத்தினை அளக்க உதவும் ஒரு முக்கிய சுட்டியாகும். நாட்டின் மொத்த தேசிய வருமானம் இதே காலகட்டத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2015-16 ஆம் ஆண்டில் 8 சதவீதமாக இருந்தது என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


   நாட்டின் விவசாய வளர்ச்சி, தனி நபர் வருமானம் அதிகரிப்பு