தியாகராயநகரில் கட்டிட தீ விபத்து:மூச்சுத்திணறல், கண் எரிச்சல் காரணமாக பொதுமக்கள் பாதிப்பு

Header Banner

தியாகராயநகரில் கட்டிட தீ விபத்து:மூச்சுத்திணறல், கண் எரிச்சல் காரணமாக பொதுமக்கள் பாதிப்பு

  Wed May 31, 2017 21:53        India, Malayalam

சென்னை,

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் ‘தி சென்னை சில்க்ஸ்’ மற்றும் ‘ஸ்ரீ குமரன் தங்க மாளிகை’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த துணிக் கடை மற்றும் நகைக்கடை இயங்கி வருகிறது.

 

சென்னை சில்க்ஸ் கடையின் கீழ் தளத்தில் உள்ள ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நகைக்கடையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென தீப்பிடித் துக்கொண்டது. தீ அருகேயுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடைக்கும் பரவியது. இதனால் கடையில் இருந்து வெளியே புகை வர ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் 7 தளங்களுக்கும் தீ, புகை பரவியது.

இதைப்பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 5 தீயணைப்பு வண்டிகளில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். உடனடியாக அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்  15 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.  55 டன் எடையுள்ள க்ரோ கிரேன் மூலம் 7 மாடிகளில் துளையிட்டு தீயணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  கடையின் சுவர் மற்றும் கண்ணாடிகளை உடைத்து தீ அணைக்கப்பட்டு வருகிறது. துணிகள் எரிந்ததால் கரும் புகை வெளியில் வந்து கொண்டே இருக்கிறது. அதிகளவில் புகை வெளியேறியதால் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  துரைசாமி சுரங்கப்பாதை, கோடம்பாக்கம், வடக்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கண் எரிச்சல் காரணமாக வாகன ஓட்டிகள் பாதிப்பு அடைந்தனர். துணை கமிஷனர் சரவணன் தலை மையில் சுமார் 200 போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.   சென்னை சில்க்சின் அடித்தள பகுதி அபாய கரமான பகுதியாக அறிவிக் கப்பட்டு அந்த பகுதியில் பொது மக்கள் யாரையும் போலீசார் அனுமதிக்க வில்லை.   தியாகராயநகரில் கட்டிட தீ விபத்து:மூச்சுத்திணறல், கண் எரிச்சல் காரணமாக பொதுமக்கள் பாதிப்பு