இரட்டை இலை எங்களுக்கே சொந்தம்: தேர்தல் ஆணையத்திடம் சசிகலா பதில் மனு

Header Banner

இரட்டை இலை எங்களுக்கே சொந்தம்: தேர்தல் ஆணையத்திடம் சசிகலா பதில் மனு

  Tue Mar 21, 2017 16:17        Tamil

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையை பெறுவதற்கு சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். தரப்பினர் முயற்சி செய்து வருகின்றனர்.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். இதேபோல் சசிகலா ஆதரவு அணியினரும் தலைமை தேர்தல் ஆணையரை நேற்று சந்தித்து மனு அளித்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஓ.பி.எஸ். தரப்பு மனு அளித்துள்ளது.எனவே, இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக 21-ம் தேதி பதில் தரும்படி சசிகலாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது. அதன்படி, சசிகலா தரப்பு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கட்சியில் உள்ள பெரும்பாலான பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் பக்கம் உள்ளதாகவும், அதனால் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் சசிகலா கூறியுள்ளார்.

சசிகலா தரப்பில் தற்போது பதில் அளித்ததையடுத்து, நாளை இரு தரப்பினரிடமும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துகிறது. இதற்காக நாளை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் இரு அணியினரும் ஆஜராக உள்ளனர். அவர்களிடம் நாளை நடைபெறும் இறுதி விசாரணைக்குப் பின்னர் இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்கப்படும் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.

maalaimalar   Double leaf belongs,Shashikala reply to the EC