ரூபெல்லா தடுப்பூசி குறித்து தி.மு.க. கவன ஈர்ப்பு தீர்மானம்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

Header Banner

ரூபெல்லா தடுப்பூசி குறித்து தி.மு.க. கவன ஈர்ப்பு தீர்மானம்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

  Tue Mar 21, 2017 16:16        Tamil

சட்டசபையில் இன்று குழந்தைகளுக்கு போடப்படும் தட்டம்மை- ரூபெல்லா தடுப்பூசி திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது பற்றிய கவனஈர்ப்பு தீர்மானத்தை தி.மு.க. உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், “குழந்தைகளுக்கான ரூபெல்லா தடுப்பூசி போடும் திட்டத்தை நிறைவேற்றுவது அவசியம்தான். ஆனால் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. தவறான தகவல்கள் பரவுவதால் தடுப்பூசியை போட்டுக் கொள்ள பெற்றோர் பயப்படுகிறார்கள். எனவே முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தி இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதில் வருமாறு:-“போலியோ நோயை ஒழித்ததில் தமிழ்நாடு சாதனை படைத்து இருக்கிறது. எனவே ரூபெல்லா தடுப்பூசி திட்டத்தையும் தமிழக அரசு சிறப்பாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று இத்திட்டத்தை செயல்படுத்த தொடங்கினோம்.

கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறின்போது ஏற்படும் ரணஜன்னியை தடுப்பதற்காக ரணஜன்னி தடுப்பூசி அளிக்கப்படுகிறது. இது 1985 முதலே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு ரூபெல்லா தொற்றுநோய் ஏற்படுமானால் குழந்தைகள் பிறவி குறைபாடுகளுடன் பிறக்கும் அபாயம் உள்ளது.

இதுபோன்ற பல்வேறு குறைபாடுகள் வரும். இதை தடுக்கத்தான் ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது. 9 மாதம் நிறைவடைந்த குழந்தை முதல் 15 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும்.

மக்கள் தொகை கணக்கின்படி 1 கோடியே 76 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 1 கோடியே 50 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது.

2020-ம் ஆண்டுக்குள் தட்டம்மை, ரூபெல்லா நோய்களின் தாக்கத்தை முற்றிலுமாக தடுப்பது இந்த திட்டத்தின் நோக்கம். விடுபட்ட குழந்தைகளுக்கு மார்ச் 31-ந்தேதி வரை இந்த தடுப்பூசி சிறப்பு திட்டமாக வழங்கப்படும். ஏப்ரல் மாதத்தில் இருந்து இது வழக்கமான தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும்.

maalaimalar   rubella vaccine,DMK Anthropology,Minister vijayapaskar