இன்னும் அறிமுகம் செய்யப்படாத சாம்சங் கேலக்ஸி S8 முன்பதிவு துவங்கியது

Header Banner

இன்னும் அறிமுகம் செய்யப்படாத சாம்சங் கேலக்ஸி S8 முன்பதிவு துவங்கியது

  Thu Mar 09, 2017 15:46        Gadgets, Tamil

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி S8 விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மார்ச் 29 ஆம் தேதி சாம்சங் நடத்த திட்டமிட்டுள்ள விழாவில் சாம்சங் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனின் முன்பதிவு லண்டனின் பிரபல ஆன்லைன் விற்பனை தளத்தில் துவங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன் படி 64 ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி S8 இந்திய மதிப்பில் ரூ.64,900 என்ற விலையில் முன்பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் கேலக்ஸி S8+ மாடல் விலை இதை விட அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டன் இணையதளத்தில் முன்பதிவிற்கு பட்டியலிடப்பட்டுள்ள கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.8 இன்ச் QHD 1440x2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம். 

இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமராவும், 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இன்டெர்னல் மெமரியுடன், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ள நிலையில் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் கேலக்ஸி S8 சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் சாம்சங் சார்பில் மார்ச் 29 ஆம் தேதி கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) என்ற விழா நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்படும் முன் முன்பதிவுக்கு பட்டியலிடப்பட்டது குறித்து சாம்சங் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

maalaimalar


   Samsung Galaxy S8 ,been introduced ,started booking