புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்: ஜூன் மாதம் இந்தியாவில் வெளியாகிறது

Header Banner

புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்: ஜூன் மாதம் இந்தியாவில் வெளியாகிறது

  Tue Feb 28, 2017 15:52        Gadgets, Tamil

நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் நோக்கியா 3310 சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாத வாக்கில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் இவற்றின் விலை மற்ற நாடுகளை விட குறைவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான், சந்தையில் விற்பனைக்கு வரும் அனைத்து நோக்கியா ஸ்மார்ட்போன்களையும் தயாரிக்கும் என எச்.எம்.டி குளோபல் நிறுவனத்தின் தலைவர் அர்டோ நியுமெல்லா தெரிவித்துள்ளார். சீனாவை காட்டிலும் இந்தியாவில் நோக்கியா பிரான்டினை மீட்டெடுக்க அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

 

இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன்களை தயாரிக்க எச்.எம்.டி குளோபல் நிறுவனத்துடனான கூட்டு தொடரும் என நியுமெல்லா தெரிவித்துள்ளார். அனைத்து நோக்கியா சாதனங்களும் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

நோக்கியா பெயரில் ஸ்மார்ட்போன், டேப்லெட்களை விற்பனை செய்ய பிரத்தியேக உரிமையை பெற்றுள்ள எச்.எம்.டி குளோபல் ஆஃப்லைன் மற்றும் முன்னணி ஆன்லைன் நிறுவனங்களுடன் இணைய உள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை நோக்கியா 3310 ரூ.3,457, நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 உள்ளிட்டவை கூகுள் அசிஸ்டண்ட் சேவையுடன் முறையே ரூ.9,805, ரூ.13,332 மற்றும் ரூ.16,154 விலையில் அறிமுகம் செய்தது.

maalaimalar


   new Nokia smartphones,released in India in June