பணமதிப்பு நீக்கத்தால் சென்னையில் ரியல் எஸ்டேட்டில் ரூ. 1,100 கோடி இழப்பு

Header Banner

பணமதிப்பு நீக்கத்தால் சென்னையில் ரியல் எஸ்டேட்டில் ரூ. 1,100 கோடி இழப்பு

  Wed Jan 11, 2017 14:39        Tamil

உயர்மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். பணமதிப்பு நீக்கத்தால் நாடு முழுவதும் கடுமையான பணத்தட்டுபாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். விவசாயிகள், சிறு வணிகர்கள், ஆகியோர் இந்த பிரச்சினையால் கடும் அவதிப்பட்டனர்.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் முடிவால் பெரிதும் பாதிப்புக்குள்ளானது கட்டுமான தொழில் ஆகும்.

மும்பை, புனேயில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலதிபர்கள் இதனால் 70 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது பொருளாதாரத்தை ஆட்டம் கானும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை மிகவும் மந்தமாக காணப்பட்டது.

சென்னையை பொறுத்தவரை ரியல் எஸ்டேட் துறையில் பணமதிப்பு நீக்கத்தால் கிட்டதட்ட ரூ. 1,100 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னை நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனையில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக கட்டுமான நிறுவன நிர்வாகி ஒருவர் கூறும் போது:-

பணமதிப்பு நீக்கத்தால் எங்கள் நிறுவனத்தில் புதிய அடுக்குமாடி விற்பனையில் 29 சதவீதம் பாதிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டில் 16,187 யூனிட்டுகள் விற்பனைக்காக இருந்தன. ஆனால் 10,615 யூனிட்டுகளே விற்பனையானது என்றார்.

புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்வது 18 சதவீதம் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலும் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கட்டுமான தொழில் வட்டாரங்கள் தெரிவித்தன.

8 முக்கிய நகரங்களில் வீடு விற்பனையில் 44 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டிடங்களை கட்டி விற்பனை செய்பவர்களுக்கு 8 நகரங்களில் ரூ 22,600 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்டுமானம் மட்டுமல்லாமல் பல்வேறு தொழில்களும் பணமதிப்பு நீக்கத்தால் நசிந்துள்ளன.

வாகனங்கள் விற்பனையும் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விற்பனை மந்தமாக உள்ளது. டிசம்பர் வரை 18.66 சதவீதம் வாகன விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கு பணமதிப்பு நீக்கமே காரணம் என்று இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

மேலும் பணத்தட்டுபாடு காரணமாக அனைத்து வகையான வியாபாரமும் பாதிக்கப்பட்டது.   Quote removal ,real estate,Chennai,1000crore loss