சர்வதேச அளவில் 76 சதவீதம் பேர் குண்டாக உள்ளனர்: ஆய்வில் தகவல்

Header Banner

சர்வதேச அளவில் 76 சதவீதம் பேர் குண்டாக உள்ளனர்: ஆய்வில் தகவல்

  Fri Jan 06, 2017 16:09        Tamil, World

ஆக்லாந்து தொழில்நுட்ட பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உடல் பருமன் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களில் 550 கோடி மக்கள் உடல் குண்டானவர்கள் என தெரியவந்துள்ளது. இது உலக மக்கள் தொகையில் 76 சதவீதம் என கண்டறியப்பட்டுள்ளது.

இது பூமியில் தோன்றியுள்ள புது விதமான தொற்றுநோய் என ஆராய்ச்சியாளர்கள் வர்ணித்துள்ளனர். குண்டாவதற்கு உடலில் ஏற்படும் அதிக அளவு கொழுப்பே காரணம். அதனால் உடல் நலத்துக்கு கேடு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு போதுமான அளவு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடாததே காரணம் என்றும் தெரிவித்துள்ளனர். குண்டாவதால் அடி வயிற்று பகுதியில் அதிக அளவு கொழுப்பு உருவாவதால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   Internationally, 76 percent ,overweightstudy information